ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசுடன் நடத்திய அனைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட
பல தரப்புகளுடன் நடத்திய
பேச்சுவார்த்தைகளின் போது
உறுதி அளிக்கப்பட்ட எந்த விடயங்களும் நிறைவேற்றப்படாமையினால் வேலை நிறுத்தம் ஒன்றுக்கு போகாமல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இன்னும் பேச்சு வார்த்தை ஒன்றுக்கு முயற்சிப்பதாகவும் அம்முயற்சியும் தோல்வியடைந்தால் ஆசிரியர்கள் கடும் தொழிற்சங்க
நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.