மட்டக்களப்பு நகர் காந்திப்பூங்காவில் நேற்று (15-03-2025) சனிக்கிழமை மாலை இன நல்லுறவுக்கான இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு ஜாமிஉஸ் சலாம் ஜூம்ஆப் பள்ளிவாயல், மட்டக்களப்பு சலாமா பெளண்டேசன் நிறுவனம், மட்டக்களப்பு இஸ்லாமிய வர்த்தகர்களின் நலன்புரி அமைப்பு ஆகிய நிறுவனங்களின் ஏற்பாட்டில் இவ் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் அப்துல்லாஹ் உட்பட பாதுகாப்பு உயரதிகாரிகள், சமயப்பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், உலமாக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.