முல்லைத்தீவு நாயாறு கடற்கரைப் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் குழுவினர் கடலில் நீராடிக் கொண்டிருந்த நிலையில் கடல் அலையில் மூன்று பெண்கள் சிக்கிக்கொண்டதில் மூவரும் கடலில் மூழ்கினர் பின் அங்கிருந்தர்களால் இரு யுவதிகள் உயிருடன் காப்பாற்றப்பட்டதுடன் ஒரு யுவதி உயிரிழந்த நிலையிலே மீட்கப்பட்டார்.
முல்லைத்தீவு - நாயாறு கடலில்
குளிக்க சென்ற யுவதிகள்
குழுவினர் நீரில் மூழ்கியுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளது.
உடையார்கட்டு பகுதியில் தையல்
கற்கும் யுவதிகளும், தையல்
பயிற்சியாளர்களுமாக 15 பெண்கள்
கப்ரக வாகனத்தில் நாயாற்று
கடற்பகுதிக்கு வந்துள்ளனர் என
கூறப்படுகின்றது.
நீரில் அடித்துச்செல்லப்பட்ட மூவரில் மீட்கப்பட்ட இரு பெண்களும்
மாஞ்சோலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.