அம்பாறை சம்மாந்துறை செனவட்டை பிரதேசத்தில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவமானது இன்று வெள்ளிக்கிழமை (18-04-2025) இடம்பெற்றுள்ளதோடு, மரணமடைந்தவர் சம்மாந்துறை, சென்னல்கிராமம் 02 பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.