திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெரியபாலம் பகுதியில் வியாழக்கிழமை (24-04-2025) இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கெப் வாகனம் ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மூதூர் -ஆனைச் சேனையைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.