மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை நகரின் பிரபல வர்த்தக நிலையம் தீயில் எரிந்து நாசமானது!



மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை நகரின் பிரபல வர்த்தக நிலையமாக திகழ்ந்து வந்த குணா மல்ரி சொப் விற்பனை நிலையத்தில் இன்று(24-04-2025) அதிகாலை  தீ விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

இவ் தீ விபத்தால் விற்பனை நிலையம் உட்பட அதனோடு இணைந்ததாக இருந்த அவர்களது வீடும் எரிந்துள்ளதுடன் வீட்டிலிருந்தவர்கள் அயலவர்களின் உதவியோடு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இத் தீ விபத்தால் விற்பனை நிலையத்திலிருந்த பல கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதுடன் வீட்டு உடமைகளும் எரிந்து நாசமாகியுள்ளது.

விபத்துக்கான காணம் இதுவரை தெரியவராத போதிலும் தீ விபத்து தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை