மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாபெரும் பட்டத் திருவிழா



2025 தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகர சபை பட்டத் திருவிழாவொன்றினை நடத்தவுள்ளது. 

(15.04.2025 )செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணி தொடக்கம் கல்லடிக் கடற்கரையில் இதனை நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இப் போட்டியில் தனியாகவும் குழுவாகவும் பங்குபற்றலாம். 

பங்குபற்ற விரும்புபவர்கள் (12.04.2025) சனிக்கிழமைக்கு முன்னர் மட்டக்களப்பு மாநகர சபையின் நானாவித வருமானப் பிரிவுடன் 0752647377 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

இப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெறுபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.
 
முதலாம் பரிசு – 100,000.00 (ஒரு இலட்சம் ரூபாய்)   
இரண்டாம் பரிசு – 50,000.00 (ஐம்பதாயிரம் ரூபாய்)   
மூன்றாம் பரிசு – 25,000.00 (இருபத்தையாயிரம் ரூபாய்;)

புத்தாக்கம், கலை நயம், பிரமாண்டம் மற்றும் எமது பிரதேசத்தின் பாரம்பரியங்கள் என்பவற்றை பிரதிபலிக்கும் வகையிலமைந்த கருப்பொருளின் அடிப்படையில் உருவாக்கப்படும் பட்டங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு தெரிவுகள் இடம்பெறும் 

சுயாதீன நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாகும் 

இப் போட்டியில் பங்கு பற்ற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
புதியது பழையவை