பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு ,மற்றொருவர் காயம்






பாணந்துறையில்  நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று (28.04.2025) பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்தவர் மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சம்பவம் தொடர்பாக தெரிய வருகையில், மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஹிரணை காவல்துறையினர் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும், சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலின் நோக்கம் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
புதியது பழையவை