முன்னாள் ஜனாதிபதி ரணில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!



பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் வெளியிட்ட சிறப்பு அறிக்கை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28-04-2025) காலை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளார்.

கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதி தனது சட்டத்தரணி மூலம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு இன்று (28-04-2025) முன்னிலையாகப் போவதாக அறிவித்தார்.


முன்னர் ஒதுக்கப்பட்ட திகதியில் அவர் முன்னிலையாகப் போவதில்லை என்று அறிவித்தார்.


நிதி முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க குறித்து ரணில் விக்கிரமசிங்க அளித்த சிறப்பு அறிக்கை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபையின் நிலையான வைப்பு நிதியை அரச வங்கியில் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.



மைத்திரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் கீழ், அவர் இராஜாங்க அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.
புதியது பழையவை