கட்டுநாயக்க 18ஆவது கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த ஒருவர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டல் அருகே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் தாக்குதலானது இரண்டு கும்பல்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.