மட்டக்களப்பு வாழைச்சேனை கடலில் மூழ்கிய சிறுவர்கள் - காப்பாற்றப்பட்டு வைத்தியாசாலையில் அனுமதி!



இன்று (04-04-2025)மாலை 04.45 மணியளவில் குடும்பத்துடன் நாசிவந்தீவுக்குச்சென்ற இரு சிறுவர்கள் நாசிவன்தீவு கடலை அண்டிய நீரேரியில் மூழ்கிய நிலையில், இளைஞர்கள் மற்றும் கல்குடா டைவர்ஸ் மீட்பு அணியினரால் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 

குறித்த சம்பவத்தில் காவத்தமுனை துறையடி வீதியைச்சேர்ந்த நெளபர் யாஸீன் (வயது 07) மற்றும் பஸ்மீர் ஹமூத் (07 வயது) ஆகியோரே இவ்வாறு காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களாவர்.  

குறித்த சிறுவர்களை உயிருடன் மீட்கும் பணியில் தீவிரமாகச் செயற்பட்ட இளைஞர்களுக்கும் கல்குடா டைவர்ஸ் மீட்பு அணியினருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.




புதியது பழையவை