மட்டக்களப்பு பெரியபோரதீவு பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் புதுவருட சிறப்பு பூஜை



"விசுவாவசு"வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை (14-04-2025)அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது.

இதனை முன்னிட்டு இன்று(14-04-2025)ஆம் திகதி  ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் சிறப்புமிக்க அம்மன் ஆலயமான  மட்டக்களப்பு பெரியபோரதீவு  ஸ்ரீ பத்திரகாளி அம்மன்  ஆலயத்தில் இன்று (14-04-2025)ஆம் திகதி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



புதியது பழையவை