மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள்!



விசுவாவசு வருடம் சித்திரை முதல் நாள், வரும் திங்கட்கிழமை 14-04-2025 அதிகாலையில் சூரியன் மேஷ ராசியில் 3:21 மணி அளவில் பிறந்திருக்கின்றது.

இதனை முன்னிட்டு இன்று ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றுவருவதுடன் பெருமளவான மக்கள் வழிபாடுகளை மேற்கொண்டுவருகின்றனர்.

தமிழ் – சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ பூரண சுதாகரன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கள் நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கைவிசேடமும் ஆலயத்தினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை