மட்டக்களப்பு தாந்தாமலையில் காட்டு யானை பெண் ஒருவர் உயிரிழப்பு!



மட்டக்களப்பு தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்குட்பட்ட றெட்பாணா கிராமத்தில்  இன்று(01-04-2025) அதிகாலை 2 மணியளவில் குடியிருப்பினுள் புகுந்த காட்டு யானை ஒருவரை தாக்கியுள்ளது.

குறித்த தாக்குதலில் 50 வயதுடைய 03 பிள்ளைகளின் தாயான ஓமநாதபிள்ளை சந்திரா என்றழைக்கப்படும் பெண் ஒருவரே மரணமாகியுள்ளார்.


இம் மரணம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிசாரும் திடீர் மரணவிசாரனை அதிகாரியும் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை