அன்னை பூபதி நினைவேந்தலுக்கு மட்டக்களப்பில் தடை உத்தரவு!



அன்னை பூபதியை கரும்புலியாகவா இந்த மட்டக்களப்பு பொலிசார் நினைத்து இப்படியான கருத்தை குறிப்பிட்டுள்ளனர்.

சரி அவர் கரும்புலியாக கூட இருக்கட்டுமே இனத்துக்காக உயிர் துறந்தால் அந்த இனம் அவரை நினைவு கூருவதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும்.?


மகிந்த அரசும், அநுர அரசும் இந்த விடயத்தில் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்..


“அன்னை பூபதி தொடர்பாக அஞ்சலி நிகழ்வுகள் செய்வதையோ ஒன்று கூடுவதையோ ஊர்வலம் நடாத்துவதையோ தடை செய்வதாகவும் அத்துடன் 2011.08.39 ம் ஆண்டின் விசேட வர்தமானியின் பிரிவு 01 தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மரணித்தவர்களை நினைவு கூறும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட இயக்கத்தினை மீளுருவாக்கம் செய்வதனை தூண்டும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தற்பொழுது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ள புலம் பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டினால் இச் செயற்பாடுகள் மேற்கொள்வதற்கு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவினை வழங்கியுள்ளது.”


அன்னை பூபதி விடுதலைப்புலிகளின் உறுப்பினர் இல்லை அவர் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி உறுப்பினர் இந்தியப்படையின் இழில் செயலை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாகத்தாய்.


இவருடை வணக்க நிகழ்வுக்கும், அவருடைய ஊர்தி பவனிக்கும் விடுதலைப்புலிகள் மீளுருவாக்கத்துக்கும் என்ன சம்மந்தம்?
மகிந்த காலத்து வர்தமானியை அநுராவும் தூசி தட்டி பின்பற்றுகிறார் என்பதே உண்மை.


அடுத்து இப்படியான செயல்களுக்கு முழுப்பொறும்பும் அன்னை பூபதியின் ஓரிரு பிள்ளைகள் (எல்லா பிள்ளைகளும் இல்லை) அவர்கள் அன்னை பூபதியின் தியாகத்தை கொச்சைப்படுத்தி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டதும் கண்டிக்கத்தக்க விடயம்.


அன்னை பூபதி அவரின் குடும்பத்துக்காக உயிர் நீக்கவில்லை ஒட்டுமொத்த இனத்திற்காக என்பதை அந்த பிள்ளைகள் புரியாதவரை இது தொடரும்..!
புதியது பழையவை