மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள் ஆரம்பம்!



உள்ளுராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் இன்று(24-04-2025) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிக்கும் பணிகள் அமைதியான முறையில் திணைக்களங்களில் நடைபெற்றுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள திணைக்களங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் இன்று(24-04-2025) காலை தொடக்கம் வாக்களிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 11554 அரச ஊழியர்கள் அஞ்சல் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரியுமான ஜஸ்ரீனா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
புதியது பழையவை