கம்பளை, கெலிஓயா பிரதேச காதி நீதிபதியொருவர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (21-04-2025) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விவாகரத்து வழக்கின் முடிவை விரைவுபடுத்தி அந்த முடிவை வெளியிடுவதற்காக, சந்தேக நபர் சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து 2 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியிருந்தார்.
இந்தநிலையில், குறித்த வர்த்தகர் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய குறித்த காதி நீதவான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவரை கண்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.