மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முன்பாக இன்று(05-04-2025) ஆம் திகதி வீதியைக் கடக்க முயன்ற ஆறு வயது சிறுவன் மற்றும் தாயின் மீது வேகமாகப் பயணித்த இளைஞரின் மோட்டார் சைக்கிளில் மோதி சற்று முன் விபத்துச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் காயமடைந்த சிறுவனும் தாயும் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பொலிஸார் வரும் வரை விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் இருவரையும் பொதுமக்கள் வீதியில் தடுத்து வைத்துள்ளனர்.