விமானம் தரையிறங்கியதும் இளம் விமானி திடீர் உயிரிழப்பு!



ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி ஒருவர் விமானத்தைத் தரையிறக்கிய சற்று நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை (09-04-2025) மாலை நிகழ்ந்தது.


அண்மையில் திருமணமான விமானி 
உயிரிழந்த 28 வயதான விமானிக்கு அண்மையில்தான் திருமணமானது என்றும்  இந்திய  ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

விமானம் தரையிறங்கியதும் அவர் அதனுள்ளேயே வாந்தி எடுத்ததாகவும் பின்னர் விமான நிலையத்திலுள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் விமானி மயங்கிச் சரிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஸ்ரீநகரிலிருந்து புதுடெல்லிக்கு விமானத்தில் இந்த துயர சம்பவம் பதிவாகியுள்ளது. விமானியை உடனையாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதும் அவர் ஏற்கனவே மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் பயணிகளை பத்திரமாக இறக்கிய இளம் விமானியின் உயிரிழப்பு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதியது பழையவை