துப்பாக்கி பிரயோகத்தில் டான் பிரியசாத் மரணம்!



வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சமூக ஆர்வலரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினருமான டான் பிரியசாத்  உயிரிழந்துள்ளார்.

வெல்லம்பிட்டி, சாலமுல்ல பகுதியில் அமைந்துள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் நேற்று (22-04-2025) இரவு 9:10 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 39 வயதான டான் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.


அவரது தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுகளும், மார்பில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுகளும் பாய்ந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் மற்றொருவர் லேசான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை