கொழும்பில் இன்று (23-04-2025) காலை பெய்த கடும் மழையினால் பொரளை, மயான சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு பெரிய மரம் ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தினால், ஏழு வாகனங்கள் சேதடைந்ததாகவும் குறித்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சரிந்து வீழ்ந்த மரத்தை குறித்த பகுதியில் இருந்து அகற்றி போக்குவரத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.