மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் தேசிய மக்கள் சக்தியின் வட்டார கிளை அலுவலகம் திறப்பு!



மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் தேசிய மக்கள் சக்தி கட்சி அலுவலகம் வெளிநாட்டு,வெளிவிவகார பிரதிய அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவினால் திறந்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் (06-05-2025) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு,மட்டக்களப்பு  மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் களுவாஞ்சிகுடி வட்டாரத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடும் தேசியமக்கள் சக்தி வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார நிகழ்வு வெள்ளிக்கிழமை(25-04-2025)களுவாஞ்சிகுடியில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில்  நடைபெற்றது.




இம்மக்கள் சந்திப்புடன் இணைந்த தேர்தல் பிரச்சார அலுவலக திறப்பு விழாவில், 
வெளிவிவகார, வெளிநாட்டு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் வேட்பாளர்களான மகேஸ்வரன் ஜனகோபன்,
ருக்மாங்கதன் துவேனிகா,
கட்சியின் முக்கியஸ்தர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக தேசியமக்கள் சக்தி திகழும் என்பதையும், மக்களது நலன்களை முன்னிறுத்தும் திட்டங்களுடன் எதிர்கட்சிகளால் கைவிடப்பட்ட, கிடப்பில் போடப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிகவிரைவில் ஆரம்பிப்பதற்கு தேசிய மக்கள் சக்திகட்சியானது போட்டியிடுவதாகவும் பிரதியமைச்சர் அருன் ஹேமச்சந்திர தெரிவித்ததோடு வேட்பாளரை ஆதரித்து பலரும் உரையாற்றினார்கள்.


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசும் கூட்டமானது குருக்கள்மடம்,மாங்காடு,தேற்றாத்தீவு,களுதாவளை,செட்டிபாளையம்,களுவாஞ்சிகுடி,கோட்டைக்கல்லாறு,எருவில்,துறைநீலாவணை,குறுமண்வெளி,ஓந்தாட்சிமடம்,பெரியகல்லாறு கிராமங்களில் இடம்பெற்றது.


புதியது பழையவை