பொலன்னறுவை வீதியில் இடம்பெற்ற வீதி விபத்து - 40பேர் காயம்!



ஹபரணை - பொலனறுவை பிரதான வீதியில் மின்னேரியா மினிஹிரிகம பகுதியில் இன்று (01-05-2025) பிற்பகல் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்புக்கும் கதுருவெலவுக்கும் இடையில் பயணித்த இரண்டு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இவ்விபத்தில் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளதாகவும்காயமடைந்தவர்கள் பொலனறுவை மற்றும் ஹிங்குராக்கொடை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதியது பழையவை