மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலய தேரோட்டம்!


மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலய தேரோட்டம் இன்று(11-05-2025) காலை பக்தர்கள் புடைசூழ இடம்பெற்றது.

ஈழத்தில் புகழ் பெற்ற விநாயகர் ஆலயங்களுள் ஒன்றாகவும் 64 அடி அமர்ந்த நிலையிலான விநாயகர் சிலையை கொண்டமைந்த சிறப்பு மிகு பேராலயமான மட்டக்களப்பு தேற்றாத்தீவு கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயம் ஆகும்

2025ம் ஆண்டுக்கான பிரமோற்சவத் திருவிழாவின் தேரோட்டத் திருவிழா இன்று(11-05-2025) வெகு சிறப்பாக பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசத்துடன் வடம் பிடித்து தேர் இழுக்க பக்தி பூர்வமாக இடம்பெற்றது.





தேற்றாத்தீவு கிராமத்தின் அடையாளமாக திகழும் கொம்புச் சந்தியானுக்கு கிராம மக்களால் கடந்த வருடம் வடிவமைக்கப்பட்ட அழகிய சித்திரத் தேர் இந்த வருடம் இரண்டாவது தடவையாக ஆலய வெளி வீதியில் இழுக்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது. 

தேரோட்டத்தை காண நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பெரும் திரளான பக்தர்கள் கூடியிருந்தர்.

பிரமோற்சவத்தின் இறுதி நாளாகிய நாளை(12-05-2025)  தீர்த்தோற்சவத்துடன்  இனிதே நிறைவு பெறும்
புதியது பழையவை