கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச் சூடு இன்று(16.05.2025) மாலை சுமித்ராராம மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் நடந்துள்ளது.
இதன்போது, காயமடைந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சோதனை
இந்நிலையில், கொட்டாஞ்சேனையை அண்மித்த பகுதியில் பொலிஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.