உருக்குலைந்த நிலையில் வயோதிபரின் சடலம் கண்டெடுப்பு!



திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்து நிலையில் ஆண் ஒருவரின் சடலம்ஒன்று இன்று (16-05-2025) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் ஜின்னா நகர் பகுதியைச் சேர்ந்த எட்வேட் கோமர் (வயது 70) என்பவருடையதாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நபர் அணிந்திருந்த சேட் மற்றும் சாரம் ஆகியவற்றை வைத்து இது தனது தந்தை என மகள் அடையாளம் காட்டியுள்ளதாகவும்.

குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் சுமார் 10 நாட்களுக்கு முன்னர் உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சடலம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை