சற்றுமுன்னர் பதிவான துப்பாக்கிச் சூடு!





கொழும்பு 13 - ப்ளூமெண்டலில் (Bloumendhal) உள்ள தொடருந்து பாதைக்கு அருகில் துப்பாக்சிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் இன்று (18-05-2025) மதியம் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
புதியது பழையவை