திருமலை திருஞானசம்பந்தர் வீதியில் மினிவேனுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து!



திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் இன்று (25-05-2025) ஆம் திகதி காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்து திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சோனகவாடி பகுதியில் இருந்து திருஞானசம்பந்தர் வீதி வழியாக சிவன் கோவில் பக்கமாக பயணித்த மினிவேனுடன் எதிர் திசையில் வந்த கொணட் ரக மோட்டார் சைக்கிள் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.




திருஞானசம்பந்தர் வீதியும் கடல்முக வீதியும் சந்திக்கின்ற சந்திக்கு அருகே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதன்போது மினிவேனை செலுத்தி வந்தவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த விபத்து இடம் பெறுவதற்கு முன்னர் கடல்முக வீதியில் இருந்து திருஞானசம்பந்தர் வீதியை அடைந்த இன்னுமொரு ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிலிலும் குறித்த மோட்டார் சைக்கிள் மோதி, பின்னர் நிலைதடுமாறி மினி வேனுடன் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை