மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் வழங்கி வைப்பு!



மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரனிடம் மனித உரிமை மற்றும் பெண்ணியம் சார் செயற்பாட்டாளர்கள் மகஜர் ஒன்றினை  இன்று (16-05-2025) மாவட்ட செயலகத்தில் கையளித்தனர்.

பாடசாலை மாணவி அம்ஷிகாவிற்கு ஏற்பட்ட நிலைமை இன்னுமொரு பிள்ளைக்கு ஏற்படுவதற்கு முன்னர் இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக துரித சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு கடுமையானதாக தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட மகஜர் அரசாங்க அதிபரிடம்   வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில்  மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை பிரதேசங்களில் செயற்படும் மனித உரிமைகள் மற்றும் பெண்ணியம்சார்
 செயற்பாட்டாளர்கள், தனிமனிதர்கள் இணைந்து
கொழும்பில் உயிரிழந்த மாணவி அம்ஷிகாவிற்கு நீதிகோரி கடந்த  (11) திகதி காந்தி பூங்காவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மேலும் பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தி அவர்களை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமை என இதன் போது வழியுருத்தப்பட்டமை 
குறிப்பிடத்தக்கதாகும்.

புதியது பழையவை