நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்திய அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதி கோரிய கனயீர்ப்பு கண்டனப் போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் திட்டமிட்டபடி இன்று (11-05-2025)காலை வெற்றி கரமாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது.
அண்மையில் கொட்டாஞ்சேனையில் ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட பம்பலப்பிட்டி பிரபல பாடசாலை ஒன்றின் மாணவி அம்ஷிகாவின் மரணத்துக்கு நீதி கோரியும் இனியும் இவ்வாறான துஷ்பிரயோகங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்யக் கோரியும் போராட்டம் இடம் பெற்றன.
பாடசாலைகளில் உளவியல் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும் கோரியே இந்த போராட்டம் வயது வித்தியாசமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனனர்.
இன்று (11-05-2025) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மட்டக்களப்பிலுள்ள சமூகமட்ட அமைப்புகள் மற்றும் பெண்கள் உரிமை சார்ந்து செயற்ப்படும் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என பலர் பங்கேற்றனர்.
இம் மாணவியின் மரணத்தின் மீது உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மரணத்திற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனைகளை விரைவில் வழங்க வேண்டும் என பல கோசங்கள் எழுப்பப்பட்டதை அவதானிக்க முடிந்தது.