பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருட்களுடன் பெண் கைது!



தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு வந்த பிரித்தானிய பெண் ஒருவர் நேற்று (12-05-2025) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருமளவிலான சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டார்.


சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, ​​அவரது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 46 கிலோகிராம் "குஷ்" எனப்படும் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர், ஒரு இளம் பெண், தனது வருகைக்குப் பின்னர் சுங்கப் பகுதியை விட்டு வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். 

கைப்பற்றப்பட்ட பொருட்களின் தெரு மதிப்பு சுமார் 460 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.


சந்தேகநபரையும் போதைப் பொருட்களையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைத்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
புதியது பழையவை