ஓட்டமாவடி - கொழும்பு வீதியில் புனாணையில் விபத்து!



ஓட்டமாவடி - கொழும்பு வீதியில் புனாணையில் நேற்று (10-05-2025) இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்கள் வெலிகந்த, மகுல்பொகுன பிரதேசத்தைச்சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்தில் இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் முற்றாகச்சேதமடைந்துள்ளதுடன், விபத்தை ஏற்படுத்தி வாகனம் தப்பிச்சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
புதியது பழையவை