கனடாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!



கனடாவில் (Canada) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வுகள் கனடாவின் ப்ரம்டன் நகரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தின் முன்பாக இடம்பெற்றுள்ளது.

தமிழர் தாயகங்கள் உட்பட, சர்வதேச அளவிலும் நேற்று (18-05-2025) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.






பாரிய வரலாற்றை தமிழர் தரப்பில் பதிவு செய்த இந்நாள், உயிரிழந்த தமிழ் உறவுகளுக்காக உணர்வு பூர்வமாக குரல் எழுப்பும் ஒரு நாளாக காணப்படுகின்றது.

இந்தநிலையில், வடக்கு மற்றும் கிழக்கில் இந்நாளை முன்னிட்டு தமது பிரிந்த உறவுகளுக்காக மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்தனர்.


இதன் தொடர்ச்சியாக கனடாவிலும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த புலம்பெயர் தமிழ் மக்கள் தமது நினைவேந்தல் நிகழ்வுகளை முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தின் முன்பாக முன்னெடுத்துள்ளனர்.


புலம்பெயர் தமிழர்கள் உள்ளிட்ட பலர் இந்நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்த தமிழர்களுக்கு தமது உணர்வுபூர்வமான அஞ்சலிகளை செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை