கிரீஸ் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!



கிரீஸ் நாட்டு தீவான காசோசில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தீவின் தலைநகரான பிரையில் இருந்து சுமார் 23 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 74 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறினார்கள்.

முதற்கட்டமாக உயிரிழப்புகள், சேதங்கள் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. கிரீஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் இஸ்ரேல், துருக்கி, எகிப்து, லிபியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.
புதியது பழையவை