தபால் தொழிற்சங்க ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!



நாடு முழுவதும் உள்ள தபால் ஊழியர்கள் இன்று (28-05-2025) நள்ளிரவு முதல் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.


தபால் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதில் தாமதம், சம்பள உயர்வு போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கும் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.
புதியது பழையவை