கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் உதவியாளர்களாக பணியாற்றிய 23 பேருக்கான நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு (04-06-2025) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இடம்பெற்ற இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ரி.ஏ.சி.என்.தலங்கம, ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ், கல்வி அமைச்சின் செயலாளர் கே.குகநாதன், மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஜே.லியாக்கத்தலி, கிழக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள மாகாண ஆணையாளர் திருமதி த.வருணி உள்ளிட்ட பல உயரதிகாரிகள் கலந்துகொண்டு நியமனங்களை வழங்கி வைத்தனர்.
2014 ஆம் ஆண்டு ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்கப்பட்ட இவர்கள் கடந்த 9 ஆண்டுகளுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.