குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இலண்டனின் காட்விக் செல்லப் புறப்பட்ட AI171 என்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று இன்று (12-06-2025) விபத்துக்குள்ளாகியுள்ளது.
தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் அகமதாபாத்விமான நிலையத்தின் 1ஆவது முனையத்தின் மேலாளர் தெரிவித்தார்.
இருப்பினும் வெளியாகியுள்ள படங்களில் விமானத்தில் நெருப்பு எரிவதையும் புகை எழும்புவதையும் காணலாம். விரிவான தகவல்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை.


