பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (12-06-2025) மதியம் நிகழ்ந்துள்ளது.
விபத்தில் மேலும் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பலாங்கொடை பொலிசார் தெரிவித்தனர்.
இறந்தவர் 17 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
