மீன்பிடி படகு விபத்து. 4பேர் மீட்பு இருவரை காணவில்லை



தங்காலை பரவி வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றிருந்த நெடுநாள் படகொன்று மீண்டும் கரைக்கு திரும்பிக் கொண்டிருந்த போது  விபத்துக்குள்ளானது. 

விபத்து நடந்த நேரத்தில் மீன்பிடி படகில் 6 மீனவர்கள் இருந்துள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் உயிர் பிழைத்துள்ளனர்.

இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதுடன், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
 
அத்துடன் உயிர் பிழைத்த மீனவர்கள் தற்போது தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாறையில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியது பழையவை