தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணிக்கும் கொனீபா அங்கத்துவ நாடான Hmong அணியினருடனான நட்புரீதியான உதைபந்தாட்ட போட்டி நடைபெறவுள்ளது.
குறித்த ஆட்டம் நேற்று(28-06-2025)ஆம் திகதி கனடாவில் இடம்பெறவுள்ளது.
தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி
தமிழீழ உதைபந்தாட்ட சம்மேளனத்தால் அமெரிக்கா மற்றும் கனடா வீராங்கனைகளை இணைத்து பயிற்சி முகாமும் அதனைத்தொடர்ந்து கொனீபா அங்கத்துவ நாடான Hmong அணியினருடனான நட்புரீதியான ஆட்டமும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி 2024 ஆம் ஆண்டு நோர்வே போடோவில் நடைபெற்ற கொனிபா மகளிர் உலகக்கிண்ணப்போட்டியில் கலந்துகொண்டு இறுதி ஆட்டத்தில் விளையாடி உலகளாவிய வரலாற்றுச் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது.