இன்று 44, வது ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்ட துயர் நினைவு..!



44 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நாள் (01-06-1981), இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத கரிநாள் இன்றாகும்.

அரிய நூல்கள், ஏட்டுச் சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் உள்ளடங்கலாக 97000 நூல்கள் எரிக்கப்பட்டன.

இன்றும் சிலர் 31 மே 1981 ஆம் திகதி இரவு எரியூட்டப்பட்டு மறுநாள்  01 யூன், 1981 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நூலகம் முற்றாக எரிந்து சாம்பலானது.!

அறிவுக்கு எரியூட்டிய அன்றைய அராஜகம் அரங்கேறி இன்று 01/06/2025, ல் 44, வருடங்கள் கடந்துள்ளது..

இதுவும் ஒருவகை தமிழினத்தின் இனப்படுகொலைவடிவமாகவே உள்ளது..

இந்நூலகமானது யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் திறக்கப்பட்டது.

இந்த நூல் நிலையம் எரிப்பதற்கு பிரதானிகளாக லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்கா ஆகிய ஐக்கியமேசிய கட்சி உறுப்பினர்களே இருந்தனர் என்பது உண்மை.

புதியது பழையவை