மட்டக்களப்பு தியாவட்டவானில் வேன் விபத்து!



மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10-06-2025) காலை வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பகுதியை நோக்கி பயணித்த வேன் ஒன்றே வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.




வேனில் பயணித்த சிலர் காயமடைந்துள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதியது பழையவை