கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் இளைஞர்கள் கைது!



சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலி இந்திய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி அபுதாபி செல்ல முயன்ற 2 இலங்கை இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கை உணவகம்


எதிஹாட் எயார்வேஸ்
கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 28 வயதுடைய இரண்டு இளைஞர்கள் என தெரியவந்துள்ளது.


அபுதாபிக்குச் செல்லவிருந்த எதிஹாட் எயார்வேஸ் EY-397 விமானத்தில் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புதியது பழையவை