கிளிநொச்சியில் எரிபொருள் பாரவூர்தி விபத்து!



கிளிநொச்சி, இயக்கச்சிப் பகுதியில் இன்று (26-06-2025) அதிகாலை இடம்பெற்ற எரிபொருள் பாரவூர்தி விபத்தில், பாரவூர்தியில் இருந்து கசிந்த டீசலை பொதுமக்கள் அள்ளிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கட்டுநாயக்கவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி, வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


விபத்தினால் பாரவூர்தியின் எரிபொருள் தாங்கியில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக டீசல் பெருமளவில் வீதியில் கசியத் தொடங்கியது. இதை அறிந்த அப்பகுதி மக்கள், பாத்திரங்கள் மற்றும் பக்கெட்டுகளுடன் வந்து கசிந்த டீசலை அள்ளிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து மக்களை அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.




விபத்தில் பாரவூர்தியின் சாரதி மற்றும் உதவியாளர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை