மட்டக்களப்பில் சாணக்கியனின் அலுவலகத்திற்கு முன்னால் குழப்பம்!



நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா ஆகியோரின் சந்திப்புக்கு சந்திவெளி பிரதேசவாசிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான காணொளியொன்று வெளியாகியுள்ளது.

அதன்போது, சாணக்கியனின் மட்டக்களப்பு - சந்திவெளி அலுவலகத்திற்கு முன்னால் சுடான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அங்கு ஹிஸ்புல்லா சட்டத்தரணி ஒருவரை சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும், இந்த சந்திப்பை சாணக்கியன் ஏற்பாடு செய்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதியது பழையவை