மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகப்பிரிவில் கோராவெளிக் கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோராவெளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தியானது நேற்றைய தினம் (09-06-2025)ஆம் திகதி நோர்ப்பு பூசையுடன் ஆரம்பமாகி இன்று (10-06-2025) ஆம் திகதி விநாயகர்பாணை எழுந்தருளல், பலி, பள்ளையப்பூசை,குளிர்த்திபாடலுடன் இவ்வாண்டுக்கான திருக்குளிர்த்தி வைபவம் பல நூற்றுக்கணக்கான பக்தர்களின் பங்குபற்றலோடு இனிதே நிறைவுற்றது.
எழு கிராம மக்கள் பந்தல் அமைத்து வருடாந்தம் நடாத்தும் திருச்சடங்கில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு கண்ணகி அம்மனின் அருளைப்பெறுகின்றனர்.