இருபத்தி ஐயாயிரம் பணத்தை லஞ்சமாக வாங்கி - பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!



அம்பாறை மாவட்டம் திருக்கோயில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபரான இரண்டு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் ரூபாய் இருபத்தி ஐயாயிரம் பணத்தை லஞ்சமாக வாங்கி போதே இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் நேற்று சனிக்கிழமை (21-06-2025) காலை 11.00 மணியளவில் அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவரை சோதனை செய்த போது மணல் அகழ்வு அனுமதி பத்திரம் இருந்தும் ரூபாய் இருபத்தி ஐயாயிரம் பணம் லஞ்சமாக கோரப்பட்டுள்ளது.

இப் பணத்தினை பெற்றுக் கொள்ளுவதற்காக மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவரை அம்பாறை பகுதிக்கு வர அழைத்துள்ளனர். இதன் போது, சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்களினால் இலஞ்சமாக பெறப்பட்ட பணத்துடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும்  நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாக லஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு உத்தியோகத்தர்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை