மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு!



இராமபிரானால் வழிபடப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தின் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று (27-06-2025)ஆயிரக்கணக்கான அடியார்களின் புடைசூழ நடைபெற்று வருகின்றது.

எதிர்வரும் 02ஆம் திகதி ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ள நிலையில் கடந்த 23ஆம் திகதி கிரியைகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் இன்று தொடக்கம் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.





மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட ஆடிஅமாவாசையில் பிதிர்க்கடன் தீர்க்கும் தீர்த்தக் கேணியையும் கொண்ட மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக கிரியைகள் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை (27-06-2025)தொடக்கம் திங்கட்கிழமை(30-06-2025) வரையில் அடியார்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த எண்ணெய்க்காப்பு சார்த்தும் நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஆலயத்தின் பிரதம குருக்கள் மற்றும் சிவாச்சாரியர்கள், ஆலய வண்ணக்கர்கள் எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வினை தொடர்ந்து பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வில் பங்கெடுத்து வருகின்றனர்.

எதிர்வரும் 02ஆம் திகதி புதன்கிழமை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.
புதியது பழையவை