பேரூந்தில் பயனித்த பெண்ணின் காலை படம் எடுத்த இளைஞனுக்கு சிறை!



பொரளை பகுதியில் தனியார் பேருந்தில் பயணித்த இளம் பெண்ணின் கால்களை கையடக்கத் தொலைபேசி மூலம் படம் பிடித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட இளைஞனுக்கு 20 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை வெளியிட்ட கொழும்பு கூடுதல் நீதவான் ஹர்ஷன கெக்குனவெல, குற்றம் சாட்டப்பட்டவருக்கு மேலும் 1,500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக 50,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படாவிட்டால், தெமட்டகொடையைச் சேர்ந்த குற்றம் சாட்டப்பட்டவருக்கு கூடுதலாக ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும் உத்தரவிடப்பட்டது.

கடந்த ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. அதை தொடர்ந்து, நீண்ட சட்ட நடைமுறை ஆரம்பித்து, தற்போது தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற துன்புறுத்தல் செயல்களில் ஈடுபடக்கூடிய மற்றவர்களைத் தடுக்கும் வகையில் தண்டனை வழங்குமாறு காவல்துறை நீதிமன்றத்திடம் கோரியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதியது பழையவை