உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கில் விழிப்பூட்டல் நிகழ்வு!



மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில்
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மண்முனை மேற்கில் விழிப்பூட்டல் இன்றையதினம் (04-06-2025)  காலை இடம்பெற்றது.


உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு,மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் 'பிளாத்திக் மாசுபாட்டினை முறியடிப்போம்' எனும் தொனிப்பொருளில் விழிப்பூட்டல் நிகழ்வுகள் இன்றையதினம்(04-06-2025) இடம் பெற்றது.



சுற்றாடல் முன்னோடி மாணவர்கள்,மற்றும் அரச திணைக்கள அதிகாரிகள் இணைந்து விழிப்புணர்வு ஊர்வலம் , வீதிநாடகம் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் இடம்பெற்றது.

யூன் 5 ஆம் திகதி உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு இன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில்,அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் சுற்றாடல் முன்னோடி மாணவர்களும் இணைத்து விழிப்புணர்வு ஊர்வலம், வீதி நாடகம் மற்றும் மரநடுகை நிகழ்வுகள் போன்றவற்றை  முன்னெடுத்திருந்தனர்.






மத்திய சுற்றாடல் அதிகாரசபையின்  ஏற்பாட்டில் மண்முனை மேற்கு பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தர்  சிறிவித்தியன் காயத்திரியின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற விழிப்புணர்வு நடை பவனியில் மண்முனை மேற்கு  பிரதேச செயலாளர் என். சத்தியானந்தி,மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் தம்பிப்பிள்ளை கோபாலப்பிள்ளை, மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர்,கல்வித் திணைக்களத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள்,வவுணதீவு பொலிஸ் நிலைய பதில்  பொலிஸ் பொறுப்பதிகாரி, சிரேஷ்ட பொதுச்சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட பலர் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.


வவுணதீவு இலங்கை வங்யின் முன்னால்  ஆரம்பமான விழிப்பூட்டல் நடை பவனியானது, வவுணதீவு உழவர் சந்தி ஊடாக வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயத்தை வந்தடைந்து அங்கு மர நடுகையும் இடம்பெற்றன.
புதியது பழையவை